விண்கற்களில் இருந்து பூமியை பாதுகாக்க சீனாவும் முயற்சி 

விண்கற்களில் இருந்து பூமியை பாதுகாக்க சீனாவும் முயற்சி 

விண்கற்கள் பூமியுடன் மோதி பெரும் அழிவுகளை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் கணைகளை ஏவும் முயற்சியில் சீனாவும் ஈடுபடுகிறது. சீனாவின் இந்த முயற்சி அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் கொண்டுள்ள DART திட்டத்திலும் தரம் உயர்ந்தது.

இந்த இரண்டு வழிகளின் நோக்கங்களும் கணைகளை வேகமாக விண்கல்லில் மோதி அதன் ஓடுபாதையை பூமிக்கு அப்பால் தள்ளி விடுவதே.

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி ஏவப்பட்ட அமெரிக்காவின் பரிசோதனை கணை 2022ம் ஆண்டு செப்டம்பர் 26ம் திகதி 10.9 மில்லியன் km தொலைவில் பயணித்த 160 km அகலமான விண்கல்லில் 6.1 km/s வேகத்தில் மோதி கல்லின் பாதையை மாற்றி இருந்தது.

2030ம் ஆண்டளவில் சீனா ஏவவுள்ள கணை பூமியில் இருந்து 7 மில்லியன் தொலைவில் பயணிக்கும் விண்கல் ஒன்றை 9 km/s வேகத்தில் மோதவுள்ளது. அதாவது சீனாவின் கணை அமெரிக்க கணையிலும் 50% அதிக வேகத்தை கொண்டது.