வியட்நாமில் படகு கவிழ்ந்து 38 உல்லாச பயணிகள் பலி

வியட்நாமில் படகு கவிழ்ந்து 38 உல்லாச பயணிகள் பலி

Halong Bay என்ற உல்லாச பயணிகளின் விருப்பத்துக்குரிய வியட்நாம் நகரில் படகு ஒன்று கவிழ்ந்ததால் குறைந்தது 38 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 10 பேர் காப்பாற்றப்பட்டும் உள்ளனர். ஏனையோர் காணாமல் உள்ளனர்.

Wonder Sea என்ற இந்த படகில் 48 உல்லாச பயணிகளும், 5 பணியாளர்களுமாக மொத்தம் 53 பேர் விபத்தின்போது இருந்ததாக VNExpress என்ற பத்திரிகை கூறுகிறது.

அப்பகுதியில் வீசிய புயல் ஒன்றே படகு கவிழ காரணம் என்று போலீசார் கூறுகின்றனர். தொடந்து பொழிந்த மழை தேடுதல் பணிகளுக்கு இடராக அமைந்துள்ளது.

சுமார் 1,600 limestone சிறு தீவுகளை கொண்ட Halong Bay ஐ.நாவின் UNESCO world heritage பதிவு கொண்டது.

2019ம் ஆண்டு Halong Bay பகுதிக்கு 4 மில்லியன் உல்லாச பயணிகள் சென்றுள்ளனர்.