தனது வரி (tariff) கொள்கைகளை அவமதிக்கும் நோக்கில், முன்னாள் அமெரிக்க சனாதிபதி Ronald Reagan னின் பேச்சு ஒன்றின் துண்டங்களை பயன்படுத்தி, Ontario மாநில அரசு அமெரிக்க தொலைக்காட்சிகளில் விளம்பரம் ஒன்றை செய்ததால் விசனம் கொண்ட ரம்ப் கனடா மீதான இறக்குமதி வரியை சனிக்கிழமை 10% ஆல் அதிகரித்து உள்ளார்.
1987ம் ஆண்டு இறக்குமதி வரிகள் தொடர்பாக Reagan செய்த இந்த தொலைக்காட்சி உரை உண்மையானது என்றாலும் ரம்ப் இதை fake செய்தி என்றுள்ளார்.
இதே காரணத்துக்காக கனடாவுடனான வர்த்தக பேச்சுக்களை ஏற்கனவே வியாழன் ரம்ப் நிறுத்தி இருந்தார்.
Ontario முதல்வர் Doug Ford இந்த விளம்பரம் திங்கள் நிறுத்தப்படும் என்றுள்ளார்.
தற்போது ரம்ப் ஆசியா நோக்கி 5 நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இவர் முதலில் மலேசியா செல்கிறார்.
