விரைவில் அறிமுகமாகும் புதிய Windows

விரைவில் அறிமுகமாகும் புதிய Windows

வீட்டுக்கு வீடு வானொலி பெட்டிகளுக்கு முன் குந்தியிருந்தவர்களை கணனி பெட்டிகளுக்கு முன் குந்த வைத்தது Microsoft நிறுவனம் தயாரித்த Windows என்ற கணனி operating system (OS). அதன் தற்கால வெளியீடு Windows 10. ஆனால் Microsoft நிறுவனம் இந்த மாதம் 24ம் திகதி புதிய Windows வெளியீட்டை அறிவிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இந்த புதிய வெளியீடு Windows 11 என்று அழைக்கப்படாது வேறு பெயரை கொண்டிருக்கலாம். Windows Sun Valley என்று அழைக்கப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த பெயரை Microsoft இணையம் முதலில் கொண்டிருந்தாலும், பின்னர் அது இணையத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால் Sun Microsystem நிறுவனம் மேற்படி பெயர் தனது Sun OS க்கு குந்தகம் என்று நீதிமன்றமும் செல்லலாம்.

புதிய Windows வெளியீட்டை பொருள் ஒன்றை விற்பனை செய்வது போல் ஒரு தடவை செலுத்தும் விலைக்கு விற்பனை செய்யாது, ஒரு சேவை போல் ஆண்டு கட்டணத்துக்கு விற்பனை செய்யவும் Microsoft முனையலாம். Word, Excel, PowerPoint போன்றவற்றை கொண்ட Microsoft Office தற்போது ஆண்டு கட்டணம் மூலமும் பெறப்படலாம். அவ்வாறாயின் உங்களின் கணனிகளில் ஒரு browser மட்டுமே இருக்கும். Google நிறுவனத்தின் Chrome Book அவ்வகையினதே.

2015ம் ஆண்டு வெளிவந்திருந்த Windows 10 க்கான support 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் பின் நிறுத்தப்படும். Windows 7 க்கான support 2020ம் ஆண்டு நிறுத்தப்பட்டு இருந்தது.