விரைவில் இந்தியா, ஐரோப்பா இடையே மிகப்பெரிய வர்த்தக இணக்கம்

விரைவில் இந்தியா, ஐரோப்பா இடையே மிகப்பெரிய வர்த்தக இணக்கம்

இந்தியாவுக்கும், ஐரோப்பாவுக்கும் இடையில் மிகப்பெரிய வர்த்தக உறவு ஒன்று விரைவில அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த இணக்கம் 27ம் திகதி அறிவிக்கப்படும் வாய்ப்பும் உண்டு.

இஸ்லாமிய காழ்ப்பு கொண்ட ரம்ப் மீது இஸ்லாமிய காழ்ப்பு கொண்ட பா.ஜ. வின் உறவு Howdy Modi யில் ஆரம்பித்து Namasthe Trump வரை மட்டுமே சென்றது. பின் ரம்ப் இந்தியாவுக்கு எதிராக திரும்ப, மோதி அரசு ஐரோப்பாவுடன் நெருக்கத்தை நாடியது.

நாளை மறுதினம், திங்கட்கிழமை, இந்தியாவில் இடம்பெறவுள்ள Republic Day கொண்டாட்டங்களில் ஐரோப்பிய Council தலைவர் Antonio Luis Santos da Costa வும், ஐரோப்பிய Commission தலைவர் Ursula Von der Leyen உம் பிரதம விருந்தினராக கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவின் நகர்வு ரம்புக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தும்.

2023ம் ஆண்டு இந்தியா ஐரோப்பிய நாடுகளுக்கு $76 பில்லியன் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்து, $61 பில்லியன் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்திருந்தது.