வெனிசுஏலா சனாதிபதி மடுரோவை அமெரிக்கா கைப்பற்றிய வேளையில் அவ்விடத்தில் இருந்த 32 கியூபர் பலியாகி உள்ளனர் என்று வெனிசுஏலா தொலைக்காட்சி கூறியுள்ளது.
வெனிசுஏலாவும் கியூபாவும் நெருக்கமான உறவை கொண்டிருந்தாலும் கியூபாவின் படைகள் அல்லது உறுப்பினர் மடுரோவின் பாதுகாப்பு குழுக்களால் இருந்தனரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
சனாதிபதி ரம்பும் ஞாயிற்றுக்கிழமை “You know, a lot of Cubans were killed yesterday” என்று கூறியிருந்தார்.
கியூபா இரண்டு தினங்களை துக்க தினங்களாக அறிவித்துள்ளது. ஆனால் மரணித்தவரின் பெயர், பதவி விபரங்களை இரண்டு நாடுகளும் அறிவிக்கவில்லை.
