வெனிசுஏலா  உதவி சனாதிபதி புதிய சனாதிபதியானார் 

வெனிசுஏலா  உதவி சனாதிபதி புதிய சனாதிபதியானார் 

வெனிசுஏலாவின் சனாதிபதி மடுரோ அமெரிக்க படைகளால் கடத்தப்பட்டு நியூ யார்க்கில் சிறை வைக்கப்பட்டதால் இன்று திங்கள் மடுரோ ஆட்சியில் உதவி சனாதிபதியாக பதவி வகித்த 56 வயதான Delcy Rodriguez வெனிசுஏலாவின் இடைக்கால சனாதிபதி ஆக பதவி ஏற்றார்.

வெனிசுஏலா சட்டப்படி சனாதிபதி இல்லாத இடத்தில் உதவி சனாதிபதியே சனாதிபதி பதவியை அடைவர்.

Delcy யின் சகோதரனே அந்த நாட்டு தேசிய அவையின் தலைவர். அவர் முன்னிலையிலேயே Delcy பதவியை ஏற்றார்.

அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு உதவுவோரை தண்டிக்கவும் Delcy அரசு அறிக்கை விடுத்துள்ளது. இந்த அறிக்கை உண்மையில் செப்டம்பர் மாதமே தயாரிக்கப்பட்டு இருந்தது.