அமெரிக்க சனாதிபதி ரம்ப் வெனிசுஏலா எண்ணெயை திருட விரும்பினாலும் அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் வெனிசுஏலாவில் பெரும்தொகை பணத்தை முதலிட பின்னடிக்கின்றன.
வெனிசுஏலா எரிபொருள் துறை அபிவிருத்திக்கு அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் $100 பில்லியன் வரை முதலீடும் என்று ரம்ப் கூறியிருந்தாலும் அமெரிக்க எரிபொருள் நிறுவன அதிகாரிகள் அவ்வகை முதலீடு நட்டத்தை தரலாம் என்று பயப்படுகின்றனர்.
Darren Woods என்ற ExxonMobil CEO வெனிசுஏலா எரிபொருள் அபிவிருத்தி முதலிட முடியாதவை (“un-investible”) என்று கூறியுள்ளார். ConocoPhillips என்ற இன்னோர் அமெரிக்க நிறுவன CEO Ryan Lance இதுவரை ரம்பின் அழைப்பை ஏற்கவில்லை.
அமெரிக்க எரிபொருள் அபிவிருத்தி நிறுவனங்கள் தமது முதலீடுகளுக்கு அமெரிக்க வரிப்பணம் மூலமான உத்தரவாதத்தை எதிர்பார்க்கின்றன. அதாவது அவர்களின் முதலீடுகளுக்கு பங்கம் அல்லது நட்டம் ஏற்பட்டால் அமெரிக்க அரசு நடத்தை வரி பணம் மூலம் உதவி செய்ய உத்தரவாதத்தை எதிர்பார்க்கின்றன.
நீண்ட கால அமெரிக்க பொருளாதார தடைகள் காரணமாக வெனிசுஏலா எரிபொருள் கட்டமைப்புகள் பாழடைந்து உள்ளன.
அத்துடன் வேகமாக வளரும் மின்னில் இயங்கும் கார்களின் ஆக்கிரமிப்பு எதிர்காலத்தில் எரிபொருளுக்கான தேவையை குறைக்கும் என்றும் கணிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டு உலக அளவில் விற்பனை செய்யப்பட்ட கார்களில் 20% மானவை மின்னில் இயங்கும் கார்கள். 2030ம் ஆண்டு அளவில் இத்தொகை 25% ஆகலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
