வேறு வழியின்றி அமெரிக்க படைகளை ஈரானுள் இறக்கவுள்ளார் ரம்ப்?

வேறு வழியின்றி அமெரிக்க படைகளை ஈரானுள் இறக்கவுள்ளார் ரம்ப்?

ஈரான் மீதான யுத்தத்தை நிறுத்த முடியாமையாலும், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்துவதை தடுக்க முடியாமையாலும் ரம்ப் அரசு தனது படைகளை ஈரானின் ஹோர்முஸ் கரையோரம் தரையிறக்க ஆவன செய்கிறது.

The USS Tripoli என்ற அமெரிக்க யுத்த கப்பல் 3,500 படையினருடன் மத்திய கிழக்கை அடைந்துள்ளது. சுமார் 257 மீட்டர் நீளமான இதில் படைகளுடன் சில யுத்த விமானங்களும், ஹெலிகளும், வேவு பார்க்கும் விமானங்களும் உள்ளன.

அதேவேளை ஈரான் 12 வயதுக்கு மேற்பட்டவர்களை தொண்டர் படைகளில் இணைய அழைத்துள்ளது.

மறுபுறம் ரம்புக்கு எதிரான No Kings ஆர்ப்பாட்டம் 3,300 சிறிய, பெரிய அமெரிக்க நகரங்களில் ஞாயிறு இடம்பெற்றுள்ளன. இவற்றில் சுமார் 8 மில்லியன் மக்கள் பங்கெடுத்ததாக மதிப்பிடப்பட்டு உள்ளது.