ஸ்பெயின் காட்டு தீக்கு 12 பேர் பலி, 23 பேர் தொலைவு 

ஸ்பெயின் காட்டு தீக்கு 12 பேர் பலி, 23 பேர் தொலைவு 

ஸ்பெயின் நாட்டில் தற்போது பல இடங்களில் பரவும் காட்டு தீகளுக்கு இதுவரை 12 பலியாகியும், 23 இருப்பிடம் அறியப்படாது தொலைந்தும் உள்ளனர்.

தற்போது தெற்கு ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் நீண்ட காலமாக நிலவுகிறது. ஸ்பெயினில் நீண்ட காலமாக வெப்பநிலை 40 C ஆக இருந்துள்ளது.

நீண்ட கால வெப்பத்தால் காய்ந்து வறண்டு சருகுகள் ஆக்கப்பட்ட இலைகளில் மின்னல் பட அவை இலகுவில் தீ பற்றி கொள்ளும். பலமாக வீசும் காற்று தீயை வேகமாக புதிய இடங்களுக்கு பரவ வைக்கும்.

சுமார் 30 நீரை வீசும் விமானங்கள் மேற்படி தீகளை கட்டுப்படுத்த முனைகின்றன.