காசாவில் ஹமாசுக்கு எதிராக போராட புதிய பாலஸ்தீன ஆயுத குழுக்களை இஸ்ரேல் ஆயுதங்கள் வழங்கி வளர்த்து வருகிறது. இந்த நகர்வை எதிர் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன.
ஒரு காலத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு (PLO) எதிராக போராட இஸ்ரேல் இரகசியமாக ஹமாசுக்கு உதவி இருந்தது.
இந்த நகர்வை இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு பாதுகாப்பு அமைச்சரவையின் அனுமதி இன்றியே நடைமுறை செய்துள்ளார்.
இந்த குழுக்களில் ஒன்று Yasser Abu Shabab என்றவரின் தலைமையில் இயங்குகிறது.
கடந்த 20 மாதங்களாக மிகையான ஆயுத, பண, தொழில்நுட்ப பலத்துடன் மோதும் இஸ்ரேல் இதுவரை ஹமாசை அழிக்க முடியவில்லை என்பது தெரிகிறது.