​அமெரிக்க ஐ.நா. தூதுவர் Nikki Haley ​பதவி துறந்தார்

Nikki

ஐ. நா. வுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி கேலி (Nikki Haley) இந்த வருட முடிவில் தனது பதவியை விட்டு நீங்குவதாக இன்று செவ்வாய் கூறியுள்ளார். அவரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் நிக்கியின் பதவிக்கு வேறு ஒருவரை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த பதவியை ஆரம்பித்த நிக்கி, இரண்டு வருடத்துள் தான் விலகுவதற்கான காரணத்தை கூறவில்லை.
.
நிக்கி தனது பதவி விலகலை தனது உயர் அதிகாரியான Secretary of States Mike Pompeo வுக்கோ அல்லது National Security Adviser John Bolton க்கோ கூறாது ஜனாதிபதி ரம்பிடமே நேரடியாக கூறியுள்ளார். இது அவர்களுக்குள் இருந்துள்ள ஒற்றுமை இன்மையை எடுத்து காட்டியுள்ளது.
.
முன்னால் Secretory of States Rex Tillerson காலத்தில் நிக்கி முக்கிய விடயங்களில் முன்னணி பிரதிநித்துவம் பெற்றுருந்தார். ஆனால் அண்மை காலங்களில் நிக்கி பல முக்கிய விடயங்களில் பின் தள்ளப்பட்டு இருந்தார். அமெரிக்காவின் ஐ. நா. தொடர்பான பல அறிவிப்புகளும் நிக்கியின் கூற்றுக்கு முரணாக இருந்துள்ளன. ரம்பும் ரஷ்யா தொடர்பான விடயங்களில் நிக்கியின் கூற்றுக்கு முரனான கருத்துக்களை கூறியிருந்தார்.
.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நிக்கி முதலில் Marco Rubio என்பவரை ஆதரித்து, பின் Ted Cruz என்பவரை ஆதரித்து இருந்தார். ரம்ப் வென்ற பின்னரே ரம்பை ஆதரித்தார் நிக்கி.

.