10 ஆண்டு விளையாடலுக்கு $700 மில்லியன் ஊதியம்

10 ஆண்டு விளையாடலுக்கு $700 மில்லியன் ஊதியம்

Shohei Ohtani என்ற ஜப்பானிய baseball வீரர், வயது 29, அமெரிக்காவின் Dodgers அணியில் 10 ஆண்டுகளுக்கு விளையாட $700 மில்லியன் ஊதியம் பெறுகிறார். விளையாட்டு துறையில் இது மிகப்பெரிய ஊதியமாகும்.

தற்போது Los Angeles நகரத்தில் உள்ள Angeles அணி சார்பில் விளையாடும் இவர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு Dodgers சார்பில் விளையாடுவர்.

இவர் பந்தை எறிதல் (pitch), பந்தை அடித்தல் (bat) இரண்டிலும் வல்லமை கொண்டவர். ஆனால் முழங்கையில் செய்த அறுவை சிகிச்சை காரணமாக இவர் 2025ம் ஆண்டு வரை பந்து எறிதலை செய்யார்.

Baseball விளையாட்டு பிரதானமாக அமெரிக்கா, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மட்டுமே விளையாடப்படும்.