சுவிஸ் தனது மொத்த சனத்தொகையை 10 மில்லியனுக்கு மேலே செல்ல விடாது தடுக்கும் நோக்கத்தில் செய்த வாக்கெடுப்பு பெரும்பான்மை வாக்குகளை பெறாது தோல்வியில் முடிந்துள்ளது.
மிகையான குடிவாளரால் மிரண்ட, குடிவரவாளர் மீது காழ்ப்பு கொண்ட Swiss People’s Party நடைமுறை செய்யவிருந்த திட்டமே தோல்வியில் முடிகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் 55% வாக்குகள் மேற்படி திட்டத்தை நிராகரித்து உள்ளன.
2002ம் ஆண்டு சுவிஸ் சனத்தொகை 7.3 மில்லியன் ஆக இருந்தது. தற்போதைய சனத்தொகை 9.1 மில்லியன்.
சுவிஸ் சனத்தொகையின் 27% அந்த நாட்டின் குடியுரிமையை கொண்டிருக்கவில்லை.
சுவிஸில் 50% க்கும் அதிகமான hotel ஊழியர்கள் குடிவரவாளரே. வைத்தியசாலை ஊழியர்களும் பெருமளவில் குடிவரவாளரே.
