$100,000 வைப்புக்கு இலங்கை 10-ஆண்டு Golden Visa

$100,000 வைப்புக்கு இலங்கை 10-ஆண்டு Golden Visa

பல நாடுகள் அந்நிய செலவாணியை பெறும் நோக்கில் தற்காலிக வதிவுரிமை வழங்குவது போல் இலங்கையும் தற்போது Golden Paradise Residence Visa வழங்க முன்வந்துள்ளது. அந்நிய நாட்டவர் இலங்கையில் $100,000 வைப்பு செய்தால் அவருக்கு 10-ஆண்டு கால வதிவுரிமை மற்றும் படிப்பு விசா வழங்கப்படும்.

வைப்பிடப்படும் $100,000 பணத்தின் அரைப்பங்கு ($50,000) ஒரு ஆண்டின் பின் மீள பெறப்படலாம். மிகுதி $50,000 வழங்கப்படும் விசா முடிவு அடையும்வரை வைப்பில் இருத்தல் வேண்டும்.

இந்த விசா கொண்டோர் இலங்கையில் வாழ உரிமை பெறுவதுடன், படிக்கும் உரிமையையும் பெறுவர்.

இவ்வகை விசாவுக்கு விண்ணப்பிப்போர் குற்றங்கள் அற்றவர் என்பதற்கான போலீஸ் அறிக்கையை தமது பிரதான நாட்டில் பெறுவது அவசியம். அத்துடன் மலேரியா, Tuberculosis, HIV/AIDS போன்ற நோய்களை கொண்டிருக்கவும் முடியாது.

பத்து ஆண்டு விசாவுக்கான விண்ணப்ப கட்டணம் $2,000.

இந்த விசாவுக்கான பின்வரும் இணையம் திங்கள் சேவைக்கு வந்துள்ளது.

https://eservices.immigration.gov.lk/golden-paradise-visa.html