13வது இந்திய-சீன எல்லை பேச்சும் இணக்கமின்றி முறிந்தது

13வது இந்திய-சீன எல்லை பேச்சும் இணக்கமின்றி முறிந்தது

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஞாயிறுக்கிழமை இடம்பெற்ற 13வது எல்லை பேச்சும் இணக்கம் எதுவும் இன்றி முடிந்துள்ளது. அதனால் கடந்த 17 மாதங்களாக அங்கு குவிக்கப்பட்டு உள்ள இரத்தரப்பு படைகளும் தொடர்ந்தும் எல்லையில் நிலைகொள்ளும்.

13வது பேச்சு சீன-இந்திய எல்லையோரம், சீனாவுள் உள்ள Moldo என்ற இடத்தில் இடம்பெற்றது. இந்த பேச்சு 8.5 மணித்திலாலங்கள் இடம்பெற்றன.

பேச்சின் முடிவில் இந்திய தரப்பு தமக்கு “constructive suggestions” கிடைத்ததாக கூறினாலும், சீனா இந்திய தரப்பு இந்தியாவின் நிபந்தனைகள் “not agreeable” என்று கூறியுள்ளது. சீனா மிகையான படைகளை திபெத் பகுதில் கொண்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை இந்தியாவும் பாகிஸ்தான் எல்லையில் இருந்த சிறு தொகுதி இராணுவத்தை சீன எல்லைக்கு நகர்த்தி உள்ளது.

சுமார் 4,270 மீட்டர் (14,000 அடி) உயரத்தில் உள்ள Galwan Valley போன்ற எல்லை பகுதியில் இராணுவத்தை நீண்ட காலம் கொண்டிருப்பது இலகுவான காரியம் அல்ல. இங்கே வெப்பநிலை சுமார் -30 C ஆக இருக்கும். இங்குள்ள படைகளுக்கு தொடர்ந்தும் தேவையான பொருட்களை அனுப்புவது கடினம்.