14 வயதில் Zhang Ziyu 2.26 மீட்டர் உயரம், புதிய Yao Ming?

14 வயதில் Zhang Ziyu 2.26 மீட்டர் உயரம், புதிய Yao Ming?

சீனாவில் Zhang Ziyu என்ற 14 வயது மாணவி தற்போது 2.26 மீட்டர் (7 அடி 5 அங்குலம்) கொண்டவளாக உள்ளார். ஒரு கூடைப்பந்து விளையாடும் இவர் Yao Ming என்ற முன்னாள் சீன கூடை பந்தாட்ட வீரனை நினைவு கொள்ள வைக்கிறார். Yao Ming முன்னாள் வீரர் 2.29 மீட்டர் (7 அடி 6 அங்குலம்) உயரம் கொண்டவர்.

ஏனைய கூடை பந்தாட்ட வீரர் துள்ளி, பாய்ந்து பந்தை கூடைக்குள் போடும் நிலையில், Zhang Ziyu நிலத்தில் நின்றே பந்தை இலகுவாக கூடைக்குள் போட முடிகிறது. வியாழன் இடம்பெற்ற போட்டி ஒன்றில், போட்டி ஆரம்பித்து 25 செக்கன்களில் இவர் 42 புள்ளிகளை பெற்று இருந்தார்.

Yao Ming போலவே இவரும் பிற்காலங்களில் அமெரிக்கா சென்று விளையாடி பெரும் செல்வமும், புகழும் தேடலாம் என்று கருதப்படுகிறது.

இவர் முதலாம் பாடசாலை ஆண்டில் 1.6 மீட்டர் உயரத்தையும், ஆறாம் ஆண்டில் 2.1 மீட்டர் உயரத்தையும் அடைந்து இருந்தார். இவரின் தந்தையார் 2.13 மீட்டர் உயரத்தையும், தாயார் 1.98 மீட்டர் உயரத்தையும் கொண்டுள்ளனர். வழமையாக சீனர் உயரம் குறைந்தவர் என்றாலும், இவரின் குடும்பமே 6 அடிக்கும் மேற்பட்டவர்.

தந்தை, தாய் இருவரும் கூடை பந்தாட்ட வீரரே. தாயார் சீன தேசிய குழுவில் விளையாடியவர்.

1980ம் ஆண்டு பிறந்த Yao Ming முதலில் சீனாவின் Shanghai Sharks கூடை பந்தாட்ட விளையாட்டு அணியில் விளையாடி, பின் அமெரிக்காவின் Houston Rockets என்ற NBA அணியில் விளையாடியவர். இவருக்கு Rockets ஆண்டு ஒன்றுக்கு $10 மில்லியன் ஊதியம் வாழங்கியதாக கூறப்படுகிறது. 2008ம் ஆண்டில் Yao Ming விளம்பரங்கள் மூலம் மட்டும் $51 மில்லியன் வருமானம் பெற்று இருந்தார்.