150 மில்லியன் ஆண்டுகள் பழைய விலங்கு எச்சம்

150 மில்லியன் ஆண்டுகள் பழைய விலங்கு எச்சம்

பிரித்தானியாவின் Jurassic Coast கடலோரம் சுமார் 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான pliosaur என்ற வகை கடல் வாழ் விலங்கின் தலை எச்சம் ஒன்று கண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த தலை 2 மீட்டர் நீளம் கொண்டது. அதனால் இந்த கடல் வாழ் உயிரினத்தின் மொத்த நீளம் 10 முதல் 12 மீட்டராக இருந்திருக்கும் என ஊகிக்கப்படுகிறது. இதன் மிகுதி உடல் அவ்விடத்தில் காணப்படவில்லை.

இதற்கு 130 பற்கள் உண்டு. இதன் கடிக்கும் பலம் 33,000 N (newtons) என்றும் கூறப்படுகிறது. மனித கடியின் பலம் சுமார் 700 N மட்டுமே. 

ஒரு நாயின் கடி 1,000 N பலமும், சிங்கத்தின் கடி 4,000 N பலமும், கடல் முதலையின் கடி 16,000 N பலமும், டைனோசர்/Tyrannosaurus கடி 45,000 N பலமும் கொண்டன.