1500 புள்ளிகளால் கவிழ்ந்த Dow பங்கு சந்தை

Dow

அமெரிக்காவின் Dow (Dow Jones Industrial average) பங்கு சந்தை இன்று திங்கள் மதியம் அளவில் சுமார் 1,500 புள்ளிகளால் வீந்திருந்தது. அந்த பாரிய வீழ்ச்சியின் சிறிதை மீண்ட Dow நாள் முடிவின்போது 1,175 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது. Dow வரலாற்றின் அதி கூடிய ஒருநாள் வீழ்ச்சி இதுவாகும்.
.
கடந்த வெள்ளிக்கிழமை அடைந்த 665 புள்ளி வீழ்ச்சியுடன் இன்று மதிய வீழ்ச்சியுடன் மொத்தம் 2,100 புள்ளிகளால் சந்தை வீழ்ந்திருந்தது. மதிய வேளையின்போது சில நிமிடங்களில் மட்டும் 500 புள்ளிகளால் வீழ்ந்துள்ளது Dow.
.
இந்த பாரிய வீழ்ச்சிக்கு ஏற்கக்கூடிய காரணம் எதுவும் இல்லாவிடினும், அமெரிக்கா வட்டி வீதத்தை விரைவில் அதிகரிக்கலாம் என்ற கருத்து பலராலும் காரணமாக முன்வைக்கப்பட்டுள்ளது.
.
பெப்ருவரி மாதத்தில் மட்டும் அமெரிக்க பங்கு சந்தை சுமார் $1 ட்ரில்லியன் (1,000,000 மில்லியன்) பங்கு சந்தை பெறுமதியை இழந்துள்ளது.
.
பொதுவாக bond 3% அல்லது அதற்கு மேலான வரவை (yield) வழங்குமாயின், முத்தலீட்டாளர் தளம்பும் குணம் கொண்ட பங்கு சந்தையில் முதலிடுவதற்கு பதிலாக பாதுகாப்பான bond இல் முதலிடுவர். அதனால் முதலீட்டாளரின் பங்கு சந்தை மீதான ஆர்வம் குறையும். தற்போது 10 வருட bondஇன் yield 2.851% வரையில் உள்ளது.
.