$17 பில்லியன் தண்டம் செலுத்தும் Bank of America

BofA

அமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான Bank of Americaவும் அமெரிக்காவின் Department of Justice உம் செய்து கொண்ட உடன்படிக்கையின்படி Bank of America மொத்தம் $17 பில்லியனை குற்றப்பணமாக செலுத்த முன்வந்துள்ளது. இதை Justice Department இன்று வியாழன் அறிவித்துள்ளது.
.
2008 ஆம் ஆண்டளவில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னணி காரணங்களில் ஒன்றான வீட்டு கடன் கொடுப்பனவுகளில் நடந்துகொண்ட தவறான செயல்பாடுகளுக்கே இந்த தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. அக்காலங்களில் இந்த வங்கிகள் கடனை திருப்பி கொடுக்க போதிய வருமானம் இல்லாதோருக்கும் வீடுகள் கொள்வனவு செய்ய கடன் வழங்கி இருந்தன. அத்துடன் இந்த வீடுகளின் விலைகளும் நியாயமான விளைக்கும் மேலாக சென்றன.
.
ஆனால் விலைகள் விரைவில் குறையத்தொடங்கின. வேலைவாய்புகளும் குறையத்தொடங்கின. விளைவாக போதிய வருமானம் இல்லாத பலர் குறைவான சந்தை விலை கொண்ட (உதாணமாக $200,000) ஆனால் வங்கி கடன்படி உயர் விலை வீட்டின் (உதராணமாக $300,000) கடனை செலுத்தாது வீடுகளை கைவிட்டனர். அவ்வீடுகளை வங்கியே பொறுப்பெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வங்கி அவைற்றை ஏலத்தில் விட்டபோது மிக குறைந்த பணத்தையே பெற்றது.
.
அத்துடன் Bank of anerica மேற்படி வகை குளறுபடிகளில் முற்றாக முறிந்துபோன Countrywide Financial என்ற வீட்டுக்கடன் கொடுப்பனவு நிறுவனத்தை $ 2.5 பில்லியனுக்கும், Merrill Lynch ஐ $50 பில்லியனுக்கும் 2008 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்திருந்தது. அவ்விரு நிறுவனக்களின் தவறுகளுக்கும் Bank of Americaவே தண்டப்பணம் செலுத்தியது.
.
2013 ஆம் ஆண்டில் JPMorgan Chase $13 பில்லியன் தண்டப்பணம் செலுத்தி இருந்தது. தற்போது இது இரண்டாவது மிகப்பெரிய தண்ட தொகையாகவுள்ளது. Bank of America வின் தண்ட தொகைமுதல் இடத்தில் உள்ளது.