19ம் திகதி அமெரிக்காவில் மீண்டும் செலவுக்கு பணமின்மை

19ம் திகதி அமெரிக்காவில் மீண்டும் செலவுக்கு பணமின்மை

இந்த மாதம் 19ம் திகதி அமெரிக்கா மீண்டும் debt limit எல்லையை அடையும் என்றும் அதன்பின் ஊதியங்கள், சேவைகள் போன்ற செலவுகளுக்கு அமெரிக்க மத்திய அரசிடம் பணம் இல்லா நிலை ஏற்படும் என்றும் Treasury Secretary Janet Yellen இன்று வெள்ளி கூறியுள்ளார்.

செலவுகளுக்கு போதிய பணம் இல்லாத நிலையில் அமெரிக்கா எவ்வளவு கடன் பெறலாம் என்பதை debt limit என்ற சட்டம் வரையறை செய்கிறது. அந்த தொகைக்கு மேல் அரசு கடன் பெற முடியாது. பதிலுக்கு செலவுகளை குறைதல் அவசியம்.

அமெரிக்காவின் debt limit அவ்வப்போது அதிகரிக்கப்பட்டு வந்துள்ளது. 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தொகை $31.4 டிரில்லியன் ($31,400 பில்லியன்) ஆக அதிகரிக்கப்பட்டு இருந்தது. ஆனால் வரும் 19ம் திகதி அமெரிக்கா மேற்படி தொகைக்கும் அதிகமாக கடன்பட தள்ளப்படும்.

Debt limit மீறப்படும் நிலை ஏற்பட்டால் அமெரிக்காவின் House, Senate, சனாதிபதி ஆகிய மூன்று தரப்புகளும் ஒரு இணக்கத்தை அடைதல் அவசியம். அந்த இணக்கத்தில் கடன் எல்லையை அதிகரித்து மேலும் கடன் பெறலாம். இதை பொதுவாக Democratic கட்சியினர் விரும்ப, Republican வெறுப்பர்.

Republican பொதுவாக செலவை குறைக்க முனிவர். ஆனால் Democratic கட்சியினர் அதை வெறுப்பர். அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் Republican கட்சி House அவையை கைப்பற்றி உள்ளது.

ஒரு இணக்கம் ஏற்படாத நிலையில் அரசு மூடப்படும்.

2021ம் ஆண்டு debt limit தொகையை $31.4 டிரில்லியன் ஆக அதிகரிக்கப்பட்ட வேளையில் இத்தொகை மேலும் சில காலம் போதியதாக இருக்கும் என்றே கருதப்பட்டது. ஆனால் யுக்கிறேன் யுத்தம் போன்ற காரணிகள் அமெரிக்காவின் செலவை மிகையாக அதிகரித்து உள்ளன.