$2.7 பில்லியன் போதையை இந்தியா கைப்பற்றியது

$2.7 பில்லியன் போதையை இந்தியா கைப்பற்றியது

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்திருந்த $2.7 பில்லியன் பெறுமதியான heroin போதையை தாம் கைப்பற்றி உள்ளதாக இந்தியாவின் Directorate of Revenue Intelligence (DRI) கூறியுள்ளது. இதை இறக்குமதி செய்த இருவரும் கூடவே கைது செய்யப்பட்டு உள்ளனர். இவை New Delhi நகருக்கு செல்லவிருந்தன என்றும் கூறப்படுகிறது.

சுமார் 2,988 kg எடை கொண்ட இந்த போதை நாடுகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து ஈரானின் Bandar Abbas Port என்ற துறைமுகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து 2 கொள்கலன்களில் குஜராத்தில் உள்ள Mundra துறைமுகத்துக்கு இந்த மாதம் 15ம் திகதி வந்துள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா (Vijayawada) நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இயங்கும் நிறுவனம் ஒன்று இறக்குமதி செய்திருந்து என்று கருதப்படும் கொள்கலன்களிலேயே மேற்படி போதை இருந்துள்ளது. ஆனாலும் குறிப்பிடப்பட்ட முகவரியில் குடியிருப்போருக்கும் போதைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றுள்ளது விஜயவாடா போலீஸ்.

இறக்குமதி செய்யப்பட்டது பதனிடப்பட்ட talc வகை கல் என்றே ஆவணங்களில் பதியப்பட்டு உள்ளது.

சுமார் 80% முதல் 90% வரையான உலக heroin உற்பத்தியை ஆப்கானிஸ்தான் செய்கிறது.