கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் $20 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு அமெரிக்க சனாதிபதி ரம்ப் புதிதாக 50% மேலதிக இறக்குமதி வரி அறிவித்துள்ளார். இந்த புதிய வரி 30 தினங்களின் பின் நடைமுறைக்கு வருமாம்.
பால் உணவுகள், நீச்சல் தடாக பொருட்கள், தளபாடங்கள், மீன்பிடி உபகரணங்கள், தைத்த ஆடைகள் போன்ற பொருட்களுக்கே மேற்படி புதிய வரிகள் நடைமுறை செய்யப்படுகின்றன.
ரம்பின் தான்தோன்றித்தனமான முன்னைய இறக்குமதி வரிகள் (Tariff) அமெரிக்க நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டதால் ரம்ப் இம்முறை ரம்ப் சுமார் 100 ஆண்டுகள் பழைய சட்டம் ஒன்றை முதல் முறையாக பயன்படுத்துகிறார்.
Tariff Act of 1930 சட்டத்தின் Section 338 அமெரிக்க பொருட்களுக்கு அநீதி செய்யும் நாடுகளின் பொருட்களுக்கு சனாதிபதி 50% இறக்குமதி வரிகள் வரை அறவிட உரிமை வழங்குகிறது. ஆனால் கனடாவின் பதிலடிகள் ரம்ப் ஏற்கனவே ரம்ப் நடைமுறை செய்த நடவடிக்கைகளுக்கான பதிலடிகளே.
