200 மில்லியன் Huawei smartphone விற்பனை

Huawei

அமெரிக்கா, அஸ்ரேலியா, பிரித்தானியா, நியூசிலாந்து போன்ற நாடுகள் சீனாவின் Huawei (ஹுஆவெய்) மீது தடைகளை விதித்திருந்தும், அந்நிறுவனம் இந்த வருடம் 200 மில்லியன் smartphone களை விற்பனை செய்து உலக அளவிலான smartphone விற்பனையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
.
சில வருடங்களுக்கு முன் மிக சிறிய தொகை smartphone களை விற்பனை செய்திருந்த Huawei வேகமாக வளர்ந்து வந்திருந்தது. விரைவில் iPhone தயாரிக்கும் Apple நிறுவனத்தை மூன்றாம் இடத்துக்கு தள்ளியது Huawei. முதலாம் இடத்தில் தற்போதும் Samasung உள்ளது. தற்போது Samsung 20% smartphone சந்தையையும், Huawei 14% சந்தையையும், Apple 13% சந்தையையும் கொண்டுள்ளன.
.
இந்த வருடம் Huawei விற்பனை செய்த smartphone தொகை கடந்த வருட தொகையிலும் 30% அதிகம். இந்நிறுவனத்தின் P20, Honor 10, Mate 10 ஆகிய smartphoneகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
.
புதிய 5G cell phone தொழில்நுட்பத்தில் Huawei அடைந்திருக்கும் வளர்ச்சியே அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களை பயம் அடைய வைத்துள்ளது. தற்போது Huawei மட்டுமே 100% தனது தயாரிப்புகளை பயன்படுத்தி 5G networkஐ அமைத்து, 5G smartphone சேவையையும் வழங்க முடியும்.

.