$200 பில்லியன் சீன இறக்குமதிக்கு 25% இறக்குமதி வரி

US_China

அமெரிக்காவின் ரம்ப் அரசு இன்று முதல் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் $200 பில்லியன் பெறுமதியான பொருட்களுக்கு புதிய 25% இறக்குமதி வரியை (tariffs) நடைமுறை செய்கிறது.  இன்று முதல் இந்த வரி நடைமுறை செய்யப்படாலும், சீனாவில் இருந்து வெள்ளிக்கிழமைக்கு முன் வெளியேறி தற்போது கடலில் பயணிக்கும் கப்பல்களில் உள்ள பொருட்கள் மீது இந்த வரி அறவிடப்படமாட்டாது. இந்த பொருட்கள் அமெரிக்காவை அடைய சுமார் 3 முதல் 4 கிழமைகள் எடுக்கும்.
.
மேற்படி பொருட்களுக்கு முன்னர் 10% இறக்குமதி வரியை ரம்ப் அரசு நடைமுறை செய்திருந்தது. அந்த 10% வரியே இன்று முதல் 25% ஆக உயர்ந்துள்ளது.
.
நடைமுறையில் இந்த வரியை செலுத்துவது அமெரிக்கர்களே. இறக்குமதி வரி உயர, பொருளின் விளையும் உயரும். பொருட்களின் விலை உயர, அதன் கொள்வனவு குறையும். அதனால் சீனாவில் உற்பத்தி குறையும்.
.
இந்த வரி உயர்வுக்கு தாமும் பதில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சீனா கூறியுள்ளது. ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கும் என்று இதுவரை சீனா கூறவில்லை.
.
இன்று வெள்ளி சீன அதிகாரிகளுக்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வர்த்தக பேச்சுக்கள் வழமைக்கு மாறாக முன்னராகவ முடிந்துள்ளது. சீன அதிகாரிகள் இன்று நண்பகலுக்கு முன்னரே சீனா திரும்பி உள்ளனர்.
.
2018 ஆம் ஆண்டில் அமெரிக்கா சீனாவில் இருந்து $539 பில்லியன் பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்திருந்தது. அதேவேளை சீனா $120 பில்லியன் பெறுமதியான பொருட்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்திருந்தது.

.