2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் Hillary?

Hillary

 

Hillary Clinton, முன்னாள் ஜனாதிபதி Bill Clinton இனது மனைவி, தற்போது சுயசரிதை வகையிலான புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை அமெரிக்காவின் செய்தி நிறுவனமான CBS இனது கிளை நிறுவனமான Simon & Schuster அடுத்த வியாழக்கிழமை வெளியிடுகிறது.
Hard Choices என்று தலைப்பிட்டுள்ள இந்த புத்தகத்தில் Hillary பல விடயங்களை விபரித்துள்ளார். தான் Bush இன் ஈராக் மீதான தாக்குதலை ஆதரித்தது தவறு என்றுள்ளார். சிரியாவின் விவகாரம் “wicked problem” (இலாப-நட்டம் நிறைந்த, ஒன்றுக்கு ஒன்று முரணான விளைவுகளை கொண்ட) விவகாரம் என்றுள்ளார்.
மொத்தம் 595 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தில், 595 ஆம் பக்கத்தில் “Will I run for president in 2016” என்ற கேள்வியையும் கேட்டு, “The answer is, I haven’t decided yet” என்று பதிலையும் கூறியுள்ளார். அதாவது தான் 2016 ஆம் ஆண்டு அமரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டி இடுவதா அல்லது இல்லையா என்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லையாம்.