2022 பசி கொடுமை சுட்டியில் இலங்கை 64ம் இடத்தில்

2022 பசி கொடுமை சுட்டியில் இலங்கை 64ம் இடத்தில்

2002ம் ஆண்டுக்கான உலக பசி கொடுமை சுட்டியில் (2022 Global Hunger Index) இலங்கை (Moderate) 64ம் இடத்தில் உள்ளது. இந்த சுட்டியின்படி 2000ம் ஆண்டிலும் 2007ம் ஆண்டிலும் Serious அளவிலான பசி கொடுமையில் இருந்த இலங்கை 2014ம் ஆண்டிலும் இந்த ஆண்டிலும் Moderate பசி கொடுமையில் உள்ளது.

இந்த சுட்டி கணிப்பில்,

 9.9 புள்ளிகள் வரை பெறும் நாடுகள் Low நிலை பசி கொடுமை நாடுகளாகவும்,

10.0 முதல் 19.9 வரையான புள்ளிகளை பெறும் நாடுகள் Moderate நிலை நாடுகளாகவும்,

20.0 முதல் 34.9 வரையான புள்ளிகளை பெறும் நாடுகள் Serious நிலை நாடுகளாகவும்,

35.0 முதல் 49.9 வரையான புள்ளிகளை பெறும் நாடுகள் Alarming நிலை நாடுகளாகவும், 

50.0 புள்ளிகளுக்கு மேலே பெறும் நாடுகள் Extremely Alarming நாடுகளாகவும் அளவிடப்படும்.

இந்தியா (Serious) 29.1 புள்ளிகளை பெற்று 107ம் இடத்தில் உள்ளது. 2014ம் ஆண்டு 28.2 புள்ளிகளை பெற்று 101ம் இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 6 இடங்கள் பின்தள்ளப்பட்டு உள்ளது. இந்தியா 2000ம் ஆண்டில் 38.8 புள்ளிகளையும், 2007ம் ஆண்டில் 36.3 புள்ளிகளையும் கொண்டிருந்தது.

சீனா (Low ) 5 புள்ளிகளுக்கும் குறைவான புள்ளிகளை பெற்று 1ம் இடத்தில் உள்ளது. சீனாவுடன் மேலும் 16 நாடுகள் முதலாம் இடத்தில் உள்ளன. 2000ம் ஆண்டில் 13.3 புள்ளிகளை மட்டும் கொண்டிருந்த சீனா, 2007ம் ஆண்டில் 7.8 புள்ளிகளை கொண்டிருந்தது. 2014ம் ஆண்டிலும் இந்த ஆண்டும் சீனா பெற்ற புள்ளிகள் 5க்கும் குறைவு.

நேபாளம் (Moderate) 19.2 புள்ளிகளை பெற்று 81ம் இடத்தில் உள்ளது.

பங்களாதேசம் (Moderate) 19.6 புள்ளிகள் பெற்று 84ம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் (Serious) 26.1 புள்ளிகளை பெற்று 99ம் இடத்தில் உள்ளது.

செல்வந்த நாடுகள் இந்த கணிப்பில் உள்ளடக்கப்படவில்லை.

பின்வரும் தரவுகள் கணிப்புக்கு உள்ளெடுக்கப்பட்டன: 1) அனைத்து மக்களுக்கும் போதிய அளவு calorie இல்லாமையின் அளவு, 2) 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கு தேவையான உயரம் இன்மை, 3) 5 வயதுக்கும் குறைந்த சிறுவர்களின் உயரத்துக்கு ஏற்ற எடை இன்மை, 4) 5 வயதுக்கும் குறைந்தோரின் மரண அளவு.