2022 Winter ஒலிம்பிக் செல்லும் ஒரேயொரு இந்தியர்

2022 Winter ஒலிம்பிக் செல்லும் ஒரேயொரு இந்தியர்

வெள்ளிக்கிழமை சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் ஆரம்பமாகவுள்ள 2022 Winter ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து Arif Khan என்ற ஒருவர் மட்டுமே செல்கிறார். இவர் ஒரு காஸ்மீர் வாசி.

இந்தியா ஒரு வெப்பமான மத்திய கோட்டு நாடு என்றாலும், காஸ்மீர் போன்ற இமயமலையை அண்டிய வடக்கு மாநிலங்கள் பல winter விளையாட்டுகளை பழக வசதியான இடங்கள். ஆனாலும் இந்தியாவில் இருந்து ஒருவர் மட்டுமே winter ஒலிம்பிக் போட்டிக்கு செல்கிறார். இவரை 6 அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர்.

Arif Khan தனது பயிற்சிகளை Bosnia என்ற நாட்டிலேயே தனியார் வழங்கிய உதவி பணத்தை கொண்டு செய்துள்ளார். இவரின் பயிற்சிக்கு இந்திய அரசு உதவிகள் எதையும் செய்யவில்லை.

போட்டிக்கு செல்லும் செலவுகள் காரணமாக தனது திருமணத்தை இவர் பின்தள்ளி உள்ளார்.

இவர் Slalom மற்றும் Giant Slalom ஆகிய போட்டிகளில் பங்கு கொள்வார். இவரே ஆரம்ப விழாவில் இந்திய கொடியையும் காவி செல்வார்.