2024 இல் பா.ஜ வை எதிர்க்க 17 கட்சிகள் இன்று இணைவு

2024 இல் பா.ஜ வை எதிர்க்க 17 கட்சிகள் இன்று இணைவு

2024ம் ஆண்டு இந்தியாவில் பொது தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியை எதிர்த்து போட்டியிட 17 காட்சிகள் இன்று வெள்ளி பீகார் மாநிலத்தில் சந்தித்து இணங்கி உள்ளன. இவற்றுள் பல மாநில அளவில் மட்டும் பலம் கொண்ட காட்சிகள்.

ஆனாலும் இந்த கூட்டணியுள் உள்ள கட்சிகள் சில தொடர்ந்தும் தம்முள் முரண்படுகின்றன. காங்கிரஸ் கட்சியும், Aam Aadmi கட்சியும் (AAP) தம்முள் பெரிய அளவில் முரண்படும் கட்சிகள்.

காங்கிரஸ், Aam Aadmi கட்சி, தி.மு.க., Samajwadi கட்சி, Trinamool Congress, Nationalist Congress, CPI, CPM, JDU, ஆகியனவும் *இந்த கூட்டணியில் அடங்கும்.

எதிர்கட்சிகள் தமக்கு எதிராக இணைந்ததையிட்டு தாம் பயம் கொள்ளவில்லை என்று பா. ஜ. கூறியுள்ளது.

மொத்தம் 542 ஆசனங்களை கொண்ட இந்திய அவையில் பா.ஜ. தற்போது 301 ஆசனங்களை கொண்டுள்ளது.

இந்தியாவில் 80% மக்கள் இந்துக்கள், 14% மக்கள் இஸ்லாமியர், 2,3% மக்கள் கிறீஸ்தவர்கள். பாரதீய ஜனதா கட்சி இந்து வாக்குகளில் வளர முயலும் கட்சி.