2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் ரம்ப்

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க சனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார் முன்னாள் அமெரிக்க சனாதிபதி ரம்ப். இந்த அறிவிப்பை அவர் இன்று செவ்வாய் இரவு தனது மார்-எ-லாகோ (Mar-a-Lago) மாளிகையில் தெரிவித்து உள்ளார்.

“மீண்டும் அமெரிக்காவை great and glorious நாடாக மாற்ற நான் சனாதிபதி போட்டியாளராகிறேன் என்பதை இன்று இரவு  அறிவிக்கிறேன்” என்றுள்ளார்.

இந்த அறிவிப்புக்கு சற்று முன் இவர் போட்டியிட தேவையான பாத்திரங்கள் Federal Election Commission என்ற தேர்தல் திணைக்களத்துக்கு வழங்கப்பட்டு உள்ளன.

வழமைபோலவே ரம்ப்  ஆதாரம் அற்ற பொய் கூற்றுகளையும் தெரிவித்துள்ளார். பைடென் $85 பில்லியன் பெறுமதியான இராணுவ தளபாடங்களை ஆப்கானிஸ்த்தானில் கைவிட்டதாக ரம்ப் கூறியுள்ளார். உண்மையில் தலிபானிடம் அகப்பட்ட இராணுவ தளபாடங்கள் மொத்த பெறுமதி சுமார் $7.1 பில்லியன் என்கிறது அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு.

போலந்து மீது ரஷ்யா செய்த தாக்குதல் தொடர்பாக சனாதிபதி பைடென் அவசர நேட்டோ கூட்டம் ஒன்றை செய்யும்போதே ரம்ப் தனது அறிவிப்பை செய்து தொலைக்காட்சி செய்திகளை பிளவு செய்துள்ளார்.

ரம்பால் Republican கட்சிக்கு ஆபத்து என்று கருதும் பலர் ரம்புக்கு எதிராக கிளர்ந்துள்ளனர். ஆனாலும் ரம்புக்கு கணிசமான விசுவாசிகள் உண்டு.

அண்மையில் இடம்பெற்ற இடைக்கால தேர்தலில் பைடெனின் கட்சியான Democratic கட்சி 50 ஆசனங்களை பெற்று Senate சபையை வென்றுள்ளது. ஆனால் Republican கட்சி தற்போது 217 House ஆசனங்களை பெற்று உள்ளது. இக்கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 218 House ஆசனங்களை பெறும் என்று கணிக்கப்படுகிறது.

Republican கையில் House இருந்தால் பைடென் மிகவும் கடினமான அடுத்துவரும் 2 ஆண்டுகளை எதிர்கொள்வார்.