Henley Passport Index கணிப்பின்படி சிங்கப்பூரின் கடவுச்சீட்டு 2026ம் ஆண்டில் உலகின் முதலாவது கடவுச்சீட்டாக அமைகிறது. மொத்தம் 192 நாடுகள் சிங்கப்பூர் கடவுச்சீட்டுக்கு விசா இன்றிய அனுமதி அல்லது on-arrival விசா வழங்குகின்றன.
அமெரிக்க கடவுச்சீட்டு 10ம் இடத்தில் இருந்தாலும் மொத்தம் 36 நாடுகளின் கடவுச்சீட்டுகள் அதிக வல்லமையுடன் உள்ளன.
இலங்கை கடவுச்சீட்டு 94ம் இடத்தில் உள்ளது. 2024ம், 2025ம் ஆண்டுகளில் இது 96ம் இடத்தில் இருந்தது.
சீன கடவுச்சீட்டு 60ம் இடத்திலும் (83 நாடுகளுக்கு விசா இன்றிய அனுமதி), இந்திய கடவுச்சீட்டு 81ம் இடத்திலும் (55 நாடுகளுக்கு விசா இன்றிய அனுமதி), பாகிஸ்தான் கடவுச்சீட்டு 101ம் இடத்திலும் உள்ளன.
1. Singapore (192 destinations)
2. Japan, South Korea, United Arab Emirates (188)
3. Sweden (187)
4. Belgium, Denmark, Finland, France, Germany, Ireland, Italy, Luxembourg, Netherlands, Norway, Spain (186)
5. Austria, Greece, Malta, Portugal, Switzerland (185)
6. Hungary, Poland, United Kingdom (184)
7. Australia, Canada, Czech Republic, Latvia, Malaysia, New Zealand, Slovakia, Slovenia (183)
8. Croatia, Estonia (182)
9. Liechtenstein, Lithuania (181)
10. Iceland, United States (180)
