2026 Winter ஒலிம்பிக்ஸ் நிறைவு, நோர்வே முதலிடத்தில் 

2026 Winter ஒலிம்பிக்ஸ் நிறைவு, நோர்வே முதலிடத்தில் 

இத்தாலியில் பெப்ரவரி மாதம் 6ம் திகதி ஆரம்பித்த Milano Cortina 2026 என்ற பெயர் கொண்ட 2026ம் ஆண்டுக்கான Winter ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 22ம் திகதியுடன் முடிவடைந்தன.

இம்முறை 41 பதக்கங்களை வென்ற நோர்வே முதலாம் இடத்திலும், 33 பதக்கங்களை வென்ற அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், 20 பதக்கங்களை வென்ற நெதர்லாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன.

ரஷ்யா யூக்கிறேனில் செய்த யுத்த குற்றங்களுக்காக ரஷ்யாவை தடை செய்திருந்த ஒலிம்பிக் அமைப்பு காசாவில் இஸ்ரேல் செய்த யுத்த குற்றங்களுக்காக இஸ்ரேலை தடை செய்திருக்கவில்லை. அதனால் இந்த போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

2030ம் ஆண்டுக்கான Winter ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்சின் French Alps என்ற இடத்தில் பெப்ரவரி 1ம் திகதி முதல் 17ம் திகதி வரை இடம்பெறும்.