எதையும் முன்பின் யோசியாது பேசும் ரம்ப் உலகின் மிகப்பெரிய வல்லரசின் சனாதிபதி பதவியில் இருக்கையிலும் அவ்வாறே முன்பின் யோசியாது பேசி வருகிறார். ஹோர்முஸ் பாதை ஊடு செல்லும் கப்பல்கள் வாய்க்கு வந்தபடி 20% பெறுமதியை அமெரிக்காவுக்கு கட்டணமாக செலுத்த வேண்டும் என்று ரம்ப் திங்கள் கூறியிருந்தார்.
அந்த அறிவிப்பால் திகைப்படைந்த சவுதி, UAE, பஹ்ரைன், குவைத், கட்டார் போன்ற அமெரிக்க நட்பு நாடுகள் வெள்ளை மாளிகையிடம் விபரம் கேட்க வெள்ளை மாளிகை முழிக்க ஆரம்பித்தது.
இறக்குமதி/ஏற்றுமதி செய்வோரே 20% கட்டணத்தை செலுத்துவர் என்று அதிகாரிகள் கருதியிருக்க, இந்த கட்டணத்தை மேற்படி நாடுகளே செலுத்தும் என்று ரம்ப் மீண்டும் ஒரு வாய்க்கு வந்தபடியான குண்டை போட்டார்.
குழம்பும் உக்கிரம் அடைய செவ்வாய் ரம்ப் 20% கட்டண கதையையே கைவிட்டார்.
ரம்பின் 20% “is of course too much” என்று கூறிய ஈரான் “we will be fair” என்று கிண்டல் செய்துள்ளது. ஈரான் அறவிடும் கட்டணம் மிக சிறியது.
