$3 பில்லியனை திருடியது இந்திய ABG Shipyard?

$3 பில்லியனை திருடியது இந்திய ABG Shipyard?

இந்தியாவில் இன்னோர் தனியார் நிறுவனம் பல வங்கிகளின் பணத்தை திருடி உள்ளதாக கூறுகிறது இந்திய CBI. குஜராத்தில் இயங்கும் ABG Shipyard என்ற கப்பல் கட்டும் நிறுவனமே இந்திய வங்கிகளில் பெற்ற $3 பில்லியனை திருடி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிறுவனம் State Bank of India, ICICI Bank, IDBI Bank, Bank of Baroda, Punjab National Bank உட்பட மொத்தம் 28 வங்கிகளில் $3 பில்லியன் கடனை பெற்று இருந்தது. அந்த கடன்கள் இதுவரை திருப்பி அடைக்கப்படவில்லை.

CBI இந்த உண்மையை இன்று ஞாயிறு வெளியிட்டாலும் இந்த கடன் களவு 2013ம் ஆண்டிலேயே ஆரம்பித்து உள்ளது. 2019ம் ஆண்டே Ernst & Young என்ற கணக்கியல் புலனாய்வு நிறுவனம் கடனாக பெற்ற பணம் களவாடப்படுவதை அறிந்து இருந்தது.

1985ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ABG Shipyard நிறுவனத்தில் சுமார் 250 தொழிலாளர் மட்டுமே உள்ளனர். இந்த நிறுவனம் 20 தொன்னுக்கு குறைவான எடை கொண்ட கப்பல்களை மட்டுமே கட்டும் வசதி கொண்டது.

இதற்கு முன் Nirav Midi என்பவர் இந்திய வங்கிகளின் $2 பில்லியன் பணத்தை களவாடி பிரித்தானியாவுக்கு தப்பி ஓடி இருந்தார். அவர் தான் வைர வியாபாரத்தில் ஈடுபடுவதாக கூறியே பெரும் தொகை பணத்தை வங்கிகளில் இருந்து பெற்று இருந்தார்.