303 அகதிகளுடன் மும்பாய் திரும்புகிறது விமானம்?

303 அகதிகளுடன் மும்பாய் திரும்புகிறது விமானம்?

பிரான்சில் 3 தினங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த விமானம் ஒன்று இந்தியாவின் மும்பாய் நகரை நோக்கி செல்கிறது என்று கூறப்படுகிறது. டுபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான Nicaragua சென்ற விமானமே பிரான்சால் தடுத்து வைக்கப்பட்டு இருந்தது.

ரோமானியாவில் பதிவு கொண்ட Legend Airlines என்ற விமான சேவையின் மிகப்பெரிய Airbus 340 வகை விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தியே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. வாடகைக்கு அமர்த்திய நிறுவனத்தின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த விமானத்தில் இருந்த பயணிகள் கடத்தப்படும் அகதிகளாக இருக்கலாம் என்றும், இவர்களின் நோக்கம் அமெரிக்காவை அடைவதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இந்த பயணிகளில் அதிகமானோர் ஹிந்தியிலும், தமிழிலும் கதைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் 11 சிறுவர்கள் உறவினர் எவரும் இன்றி தனித்து பயணித்து உள்ளனர்.