ஜப்பானை நோக்கி சூறாவளி மரியா

TyphoonMaria

ஜப்பானை நோக்கி பயங்கரமான சூறாவளி மரியா செல்கிறது. அண்மையில் ஜப்பானில் ஏற்பட்ட பெருமழைக்கும், மண்சரிவுகளுக்கும் சுமார் 110 பேர் பலியாகியும், 2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்தும் இருந்தனர். ஆனால் சூறாவளி மரியா (Typhoon Maria) மேலும் பாதிப்பை உருவாக்கலாம் என்று கருதப்படுகிறது.
.
இன்று திங்கள் சூறாவளி மரியா ஜப்பானின் ஒக்கினாவா பகுதிக்கு கிழக்கே 480 km தூரத்தில் நிலைகொண்டுள்ளது. தற்போது அதன் காற்றின் வேகம் சுமார் 230 km/h அளவில் உள்ளது. தற்போது Category 4 ஆக உள்ள மரியா விரைவில் Category 5 ஆக மாறும் என்றும் கூறப்படுகிறது.
.
செய்வாய் மாலையில் மரியா ஜப்பானின் Ryukyu தீவுகளின் தென் பகுதியை அடையலாம். பின்னர் வலுவிழந்த சூறாவளி மரியா தாய்வான் ஊடாக சென்று, சீனாவின் கிழக்கு கரையோரத்தை தாக்கும்.
.
அத்திலாந்திக் சமுத்திரத்தில் 2017 ஆம் ஆண்டு உருவான Hurricane Maria பெரும் அழிவுகளை Dominica மற்றும் Puerto Rico ஆகிய நாடுகளுக்கு வழங்கியதால், மரியா என்ற பெயர் அத்திலாந்திக் சூறாவளிகளுக்கு இடுவதில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
.

சூறாவளிகளை அத்திலாந்திக் சமுத்திரத்தில் Hurricane என்றும், தூரகிழக்கில் Typhoon என்றும், இந்து சமுத்திரத்தில் Cyclone என்றும் அழைப்பர்.
.