3,965 ஆடம்பர கார்களுடன் எரியும் கப்பல்

3,965 ஆடம்பர கார்களுடன் எரியும் கப்பல்

மொத்தம் 3,965 விலை உயர்ந்த ஆடம்பர ஐரோப்பிய கார்களுடன் Felicity Ace என்ற 650 அடி நீள கார் காவும் கப்பல் அத்திலாந்திக் சமுத்திரத்தில் எரிகின்றது. மிகையான தீ காரணமாக அந்த கப்பலில் பணியாற்றிய 22 பணியாளர்களும் போர்த்துக்கல் கடற்படையினால் மீட்கப்பட்டு உள்ளனர்.

கப்பலோட்டிகள் எவரும் இல்லாத நிலையில் கப்பல் தொடர்ந்தும் Azores தீவுகளுக்கு அருகில் எரிகிறது. கடல் நீரோட்டத்துக்கு ஏற்ப கப்பல் இழுபட்டும் செல்கிறது.

இந்த கப்பலில் 1,100 விலை Porsche கார்களும், 189 Bentley கார்களும், Volts Wagon, Audi, Lamborghini வகை கார்களும் உள்ளன என்று கூறப்படுகிறது. இந்த கப்பல் ஜெர்மனியில் இருந்து அமெரிக்கா செல்கையிலேயே தீ மூண்டுள்ளது. 2022ம் ஆண்டு Porsche Boxter Spyder சுமார் $100,000 பெறுமதியானது.

இந்த கப்பல் ஜப்பானின் Mitsui O.S.K. Lines என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. எரியும் இந்த கப்பலை கரை ஒன்றுக்கு இழுக்க உரிமையாளர் முனைகின்றனர்.