47 ஆண்டுகளுக்கு பின் சந்திரனில் நீர் தேடும் ரஷ்யா

47 ஆண்டுகளுக்கு பின் சந்திரனில் நீர் தேடும் ரஷ்யா

இன்று வெள்ளி, 47 ஆண்டுகளுக்கு பின், ரஷ்யா சந்திரனில் தரை இறங்க கலம்  ஒன்றை அனுப்பியுள்ளது. சந்திரனின் தென் துருவத்தில் இறங்க உள்ள இந்த கலம் அங்கு நீர் உள்ளதா என அறியும்.

ஒரு கார் அளவிலான Luna-25 என்ற கலத்தை Soyuz 2.1v என்ற ஏவுகணை காவி செல்கிறது. இது ஆகஸ்ட் 21ம் திகதி சந்திரனில் இறங்கவுள்ளது. இது ஒரு ஆண்டு காலம் அங்கிருந்து ஆய்வுகளை செய்யும்.

1976ம் ஆண்டுக்கு பின் இதுவே ரஷ்யாவின் முதல் சந்திரனை நோக்கிய பயணமாகும். வறுமையில் அமிழ்ந்த சோவியத் உடைய, பின் எரிபொருள் பாவனை அதிகரிக்க ரஷ்யா மீண்டும் பணம் பெற்றது. அது சந்திரனுக்கு செல்லவும் வழி செய்கிறது.

அதேவேளை இந்தியாவின் கலம் கலம் ஒன்றும் சந்திரனை நோக்கி செல்கிறது. அது ஏற்கனவே சந்திரனின் சுற்றுவட்டத்தை அடைந்துள்ளது. அது பத்திரமாக சந்திரனில் தரை இறங்கினால் அது இந்தியாவின் சாதனையாகும்.