5% நிலக்கரி மின் ஆலைகள், 73% உலக CO2 மாசு

5% நிலக்கரி மின் ஆலைகள், 73% உலக CO2 மாசு

உலகின் முதல் 10 நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் மின் ஆலைகள் உலக அளவில் 73% CO2 மாசுக்கு காரணம் என்கிறது அமெரிக்காவின் University of Colorado Boulder ஆய்வு ஒன்று. அதாவது உலக அளவில் மேற்படி 5% நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகள் 73% CO2 மாசை உருவாக்குகின்றன.

மொத்தம் 221 நாடுகளில் உள்ள 29,078 நிலக்கரி (fossil-fuel) மூலம் மின் உற்பத்தி செய்யும் ஆலைகள் இந்த ஆய்வுக்கு உட்பட்டு இருந்தன.

அதிகமாக CO2 வெளியிடும் மின் ஆலைகள் போலந்து (1 ஆலை), இந்தியா (2), தென் கொரியா (3), தைவான் (1), சீனா (1), ஜெர்மனி (1), ஜப்பான் (1) ஆகிய 7 நாடுகளிலேயே உள்ளன.

2017ம் ஆண்டு தரவுகளின்படி உலக அளவில் 38% மின்சக்தி நிலக்கரியை எரிபொருளாக கொண்ட ஆலைகளில் இருந்தும், 25% மின்சக்தி காற்று, சூரிய ஒளி போன்ற சக்திகளில் இருந்தும், 23% மின்சக்தி இயற்கை வாயு போன்ற எரிவாயுக்களை எரிபொருளாக கொண்ட ஆலைகளில் இருந்தும், 10% மின்சக்தி அணு உலைகளில் இருந்தும், 4% மின்சக்தி எண்ணெய் ஆலைகளில் இருந்தும் பெறப்படுகின்றன.