50 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு பிரித்தானிய வேலை விசா

50 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு பிரித்தானிய வேலை விசா

உலகில் உள்ள சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளுக்கு பிரித்தானிய வேலை விசா வழங்க முன்வந்துள்ளது. இந்த செய்தியை பிரித்தானிய அரசு திங்கள் அறிவித்துள்ளது. Bachelor’s, master’s படிப்பை கொண்டவர்களுக்கு 2-ஆண்டு விசாவும், PhD படிப்பை கொண்டவர்களுக்கு 3-ஆண்டு விசாவும் வழங்கப்படும்.

மேற்படி பட்டதாரிகள் தமது படிப்பை முடித்து 5 ஆண்டுகளுக்குள் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

மேற்படி விசா பெறுவோர் தமது குடும்பங்களையும் பிரித்தானிய அழைத்துவர அனுமதி வழங்கப்படும். தேவைப்படின் இவர்களின் விசா பின்னர் நீடிக்கப்படவும் உரிமை உண்டு.

மொத்தம் 50 பல்கலைக்கழகங்கள் தெரிவி செய்யப்பட்டு இருந்தாலும் அதில் 20 பல்கலைக்கழகங்கள் பிரபல அமெரிக்க பல்கலைக்கழகங்களே. மூன்று கனடிய பல்கலைக்கழகங்களும் இந்த பட்டியலில் உள்ளன.

ஆசியாவில் இருந்து அதில் 2 சீன, 2 ஹாங் காங், 2 ஜப்பான், 2 சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களும் மேற்படி