அமெரிக்கா தன் கைவசம் உள்ள 500 தொன் சத்துக்கள் நிறைந்த biscuit களை அழிக்க உள்ளது. அமெரிக்காவின் USAID என்ற உதவி அமைப்பு மூலம் வழங்கும் நோக்கிலேயே இந்த உணவுகள் தயாரிக்கப்பட்டன.
அமெரிக்க சனாதிபதி ரம்ப் திடீரென USAID அமைப்பை மூடியதால் மேற்படி உணவுகள் உரியவர்களுக்கு வழங்கப்படாது டுபாய் (Dubai) வைப்பிடம் ஒன்றில் உள்ளன.
இந்த உணவுகளின் பாவனை காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால் (expire) இவை அழிக்கப்பட உள்ளன. அதேவேளையில் திட்டமிட்ட காசா அழிப்பு காரணமாக அங்கு மக்கள் உணவு இன்றி மரணிக்கின்றனர்.
இந்த உணவு அழிப்புக்கு மட்டும் அமெரிக்கா $100,000 பணத்தை செலவிட உள்ளது. அழிக்கப்படும் உணவின் பெறுமதி சுமார் $793,000 என்று கூறப்படுகிறது.
அளிக்கப்படவுள்ள மேற்படி உணவு 27,000 பேருக்கு 1 மாத காலத்துக்கு வழங்க போதியது என்றும் கூறப்படுகிறது.