59 பேர் பலி , 500 காயம், ஆனால் terrorist என்ற சொல்லில்லை

MandalayBay
கடந்த ஞாயிறு இரவு Stephen Paddock என்றவர் நடாத்திய படுகொலைக்கு இதுவரை 59 பேர் பலியாகியும், 500 பேருக்கும் அதிகமானோர் காயப்பட்டும் உள்ளனர். இந்த படுகொலைகளை செய்த இவர் தனது hotel அறையுள் 23 இராணுவ தரத்து ஆயுதங்களை வைத்திருந்துள்ளார். இவரின் வீட்டில் இருந்த ஆயுதங்களுடன் மொத்தம் 47 ஆயுதங்கள் இவரிடம் இருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
.
அமெரிக்காவில் தனி மனிதர் ஒருவரால் செய்யப்பட்ட தாக்குதல்களில் இதுவே மிக பெரியது.
.
வழமைபோலவே அமெரிக்கா ஊடகங்களும் இந்த நிகழ்வுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றன. ஊடகங்கள் மட்டுமன்றி அரசியவாதிகளும் தமது அனுதாபத்தை தெரிவித்து வருகினறனர்.
.
ஆனால் terrorist என்ற சொல் மட்டும் எல்லோராலும் கைவிடப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலை செய்தவர் ஒரு முஸ்லீம் பெயரை கொண்டிருந்தாலோ, Allahu akbar என்று கூறியிருந்தாலோ அல்லது அவர் ஒரு இஸ்லாமிய நாட்டில் இருந்து வந்தவராவோ இருந்திருந்தால் உடனடியாக இவர் terrorist என்றே அழைக்கப்பட்டு இருந்திருப்பார். அத்துடன் இஸ்லாமியருக்கு எதிராக காழ்ப்புகளும் ஓங்கி இருக்கும். ஆனால் அவ்வாறு எதுவும் இம்முறை இடம்பெறவில்லை.
.
பதிலாக Paddock ஒரு கிறீஸ்தவர், இஸ்லாமிய நாட்டில் பிறக்காதவர். அதனால் இவர் ஒரு ‘gunman’ என்றே விழிக்கப்பட்டு உள்ளார்.
.
மேற்கு நாடுகளில் சிலருக்கு ‘radical Islamic terrorist’ என்று கூறுவதில் வரும் இன்பம், பலியானோர் மீது உள்ள இரக்கத்திலும் பலமானது, அரசியல் நோக்கம் கொண்டது.
.
டிரம்பின் கூற்றும் இந்த தாக்குதலை “act of pure evil” என்றும் இதை செய்தவர் ஒரு sick man என்றும் மட்டுமே விழித்துள்ளது.

.