6 கிழமைகளில் 7 இந்திய மாணவர் அமெரிக்காவில் மரணம்

6 கிழமைகளில் 7 இந்திய மாணவர் அமெரிக்காவில் மரணம்

இந்த ஆண்டின் முதல் 6 கிழமைகளில் குறைந்தது 7 இந்திய மாணவர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மரணித்து உள்ளனர். பொதுவாக இவர்கள் தற்கொலை, போதை (overdose) போன்ற காரணங்களுக்கே பலியாகி உள்ளனர்.

Indiana மாநிலத்தில் உள்ள Purdue University யில் 19 வயது Neel Acharya, 23 வயது Sameer ஆகிய இருவரும் மரணித்து உள்ளனர். 

Connecticut மாநிலத்து Sacred Hearts University யில் 22 வயது Dinesh Gattu, 21 வயது Sai Rakoti ஆகிய இருவரும் fentanyl overdose க்கு பலியாகி உள்ளனர்.

Georgia மாநிலத்தில் 25 வயது Vivek Saini என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருந்தார்.

சிக்காகோ பகுதியில் உள்ள University of Illinois யில் 18 வயது அமெரிக்க இந்தியரான Akul Dhawan மரணமான நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

University of Cincinnati யில் 19 வயது Shreyas Reddy தற்கொலை செய்திருந்தார்.

அமெரிக்காவில் கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவருள் 25% மாணவர்கள் இந்தியர்களே.