6 வயதை 71 வயது 26 தடவைகள் குத்தி கொலை

6 வயதை 71 வயது 26 தடவைகள் குத்தி கொலை

அமெரிக்காவின் சிக்காகோ நகரை அண்டிய Plainfield பகுதியில் 71 வயதுடைய Joseph Czuba என்பவர் 6 வயதுடைய முஸ்லீம் சிறுவனை 26 தடவைகள் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். சிறுவனின் 32 வயதுடைய தாயாரும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தாயையும், மகனையும் Joseph கத்தியால் குத்த மத்திய கிழக்கில் இடம்பெறும் இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தமே காரணம் என்று கருதுவதாக போலீசார் கூறியுள்ளனர். தாக்குதல் செய்த வேளையில் Jeseph “You Muslim must die” என்று கூறியதாக அறியப்படுகிறது.

Joseph  தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி இராணுவ தரம் கொண்டது என்றும், 12 அங்குல நீளம் கொண்டது என்றும் போலீசார் கூறுகின்றனர்.

தாயும், மகனும் கடந்த 2 ஆண்டுகளாக வாடகைக்கு தங்கியிருந்த வீட்டின் உரிமையாளரே மேற்படி Joseph என்றும் கூறப்படுகிறது.

தாயை தாக்கிய பொழுது அவர் மலசல கூட்டத்துக்குள் ஓடி ஒளிந்து text செய்திகள் மூலம் போலீசாரை அழைத்துள்ளார். 

ஹமாஸ் செய்த வரலாறு காணாத தாக்குதலுக்கு குறைந்தது 1,400 இஸ்ரேலியர்களும் பின் இஸ்ரேல் செய்த தாக்குதல்களுக்கு சுமார் 2,450 பலஸ்தீனர்களும் இதுவரை பலியாகி உள்ளனர்.

Joseph மீது போலீசார் first-degree murder உட்பட 4 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.

Plainfield பகுதி பெருமளவில் குஜராத்தி, மலையாளி போன்ற இந்தியர்கள், தென் இந்தியர்கள் வாழும் இடமாகும்.