$60 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்தது Netflix

$60 பில்லியன் பங்குச்சந்தை பெறுமதியை இழந்தது Netflix

Netflix என்ற இணையம் மூலம் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்யும் (streaming) நிறுவனம் இன்று நியூ யார்க் பங்கு சந்தையில் (Nasdaq) சுமார் $60 பில்லியனை இழந்துள்ளது. அந்த நிறுவனம் சுமார் 200,000 வாடிக்கையாளரை இழந்ததே இந்த பங்கு வீழ்ச்சிக்கு காரணம்.

நேற்று சுமார் $348 க்கு விற்பனை செய்யப்பட்ட Netflix பங்கு ஒன்று இன்று $212 வரையிலே விற்பனை செய்யப்படுகிறது. அதவாது கடந்த 24 மணி நேரத்தில் இந்த பங்கு ஒன்று சுமார் 39% வெகுமதியை இழந்து உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த பங்கு ஒன்று சுமார் $690 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிறுவனம் 2011ம் ஆண்டுக்கு பின் முதல் தடவையாக தனது வாடிக்கையாளரை தற்போது இழந்துள்ளது. ஒரு நிறுவனம் வாடிக்கையாளரை இழக்க, அதன் வருமானமும் இழக்கப்படும்.

Netflix சேவையின் கட்டணம் அண்மை காலங்களில் மிகையாக அதிகரித்து செல்வதே வாடிக்கையாளர் வெளியேற முதல் காரணம் என்று கூறப்படுகிறது.