70 வயது பெண்ணின் உடல் கண்டெடுப்பு, மரணித்து 2 ஆண்டுகள்

70 வயது பெண்ணின் உடல் கண்டெடுப்பு, மரணித்து 2 ஆண்டுகள்

Marinella Beretta என்ற 70 வயது பெண்ணின் உடலை இத்தாலியின் வடக்கு பகுதியில் Lake Como என்ற இடத்து அதிகாரிகள் கண்டெடுத்து உள்ளனர். தனியே வாழ்ந்த இவர் மரணித்து 2 ஆண்டுகளுக்கு மேல்.

மேற்படி பெண்ணின் வீட்டு தோட்டத்து மரம் ஒன்று அளவுக்கு மிகையாக வளர்ந்து முறிந்து இருந்தது. இதை அவதானித்த அயலவர் அதிகாரிகளுக்கு அறிவித்து உள்ளனர். அந்த வீட்டை அடைந்த அதிகாரிகள் பெண்ணின் வீட்டில் மரணித்த உடலை கண்டுள்ளனர். இந்த செய்தியை Como City அதிகாரி Francesca Manfredi அறிவித்து உள்ளார்.

மேற்படி பெண்ணின் மரணத்துக்கான காரணம் தெரியாவிடினும், அவர் 2019ம் ஆண்டின் இறுதியில் மரணித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் அறிந்துள்ளனர்.

இதுவரை உறவினர் எவரும் பெண்ணின் உடலை ஏற்க முன்வரவில்லை. பொலிசாரும் பெண்ணுக்கு உறவினர் எவரும் உள்ளனரா என்பதை அறியவில்லை.

அரசு இவரின் மரண சடங்குகளை செய்யவுள்ளது.