75 ஆவது இலங்கை சுதந்திர தினத்துக்கு நேரு முத்திரை

75 ஆவது இலங்கை சுதந்திர தினத்துக்கு நேரு முத்திரை

75 ஆவது இலங்கை சுதந்திர தினத்துக்கு நேரு முத்திரை

இலங்கை தனது 75 வது சுதந்திர தினத்திற்கு முதலாவது இந்திய பிரதமர்  ஜவஹர்லால் நேருவின் உருவப்படத்துடன் ஞாபகார்த்த முத்திரை ஒன்றை வெளியிட உள்ளது.

முத்திரை உருவப்படத்துக்கு நேருவின் தெரிவுக்கான காரணத்தை இலங்கை வெளியிடவில்லை.

இலங்கை 1948ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4ம் திகதி சுதந்திரம் அடைந்திருந்தது. ஆனால் இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி சுதந்திரம் அடைந்திருந்தது.

கொழும்பு சுதந்திர தின விழா பெப்ரவரி 4ம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெறும்.

யாழ்ப்பாண கலாச்சார நிலையம் (Jaffna Cultural Center) பெப்ருவரி 11ம் திகதி திறப்பு விழாவை கொண்டாடும். சுமார் 1.6 பில்லியன் இலங்கை ரூபாய்கள் செலவில் இந்தியாவால் இந்த நிலையம் யாழ்ப்பாணத்தில் கட்டப்படுகிறது.