8 இந்தியருக்கு கட்டார் மரண தண்டனை தீர்ப்பு

8 இந்தியருக்கு கட்டார் மரண தண்டனை தீர்ப்பு

எட்டு இந்தியருக்கு கட்டார் நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை தீர்ப்பு வழங்கி உள்ளதாக இந்தியா வியாழன் தெரிவித்து உள்ளது. இவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு இருந்தனர்.

இவர்கள் இந்தியா சார்பில் கட்டாரில் உளவு செய்தனர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் இரு தரப்பும் விபரங்கள் எதையும் பகிரங்கம் செய்யவில்லை.

நீதிமன்றின் இந்த தீர்ப்பை தாம் கட்டார் அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து செல்லவுள்ளதாக இந்தியா கூறியுள்ளது.

இந்த 8 பேரும் முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் என்றும், கட்டாரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்தவர்கள் என்றும்சில செய்திகள் கூறுகின்றன.

கட்டாரில் சுமார் 800,000 இந்தியர்கள் தங்கியிருந்து தொழில் செய்கின்றனர்.