800 நியூசிலாந்து மாணவ விசாக்கள் மீள் விசாரணையில்

NewZealand2

இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்குகான மாணவ விசா பெற்ற 800 பேரின் விசாக்கள் மீள்  விசாரனைக்கு உட்படுவதாக நியூசிலாந்து குடிவரவு அமைச்சர் Ian Lees-Gallway கூறியுள்ளார். இலங்கையில் இருந்து பொய்யான நிதி நிறுவனம் ஒன்று இயங்குவதாகவும், அதை பல இலங்கை மாணவர் விசாவுக்கு பயன்படுத்தி உள்ளதாகவும் அமைச்சரால் கூறப்பட்டுள்ளது.
.
இலங்கை மாணவர்களிடம் படிப்பை தொடர போதிய பணம் இல்லாதபோது, இந்த நிறுவனம் அந்த மாணவர்களிடம் போதிய பணம் உள்ளதாக பொய் ஆவணங்களை வழங்கி உள்ளது.
.
அண்மையில் இந்தியாவின் மும்பாய் நகரில் உள்ள நியூசிலாந்து அலுவலகம் இலங்கையில் இயங்கும் பொய்யான நிதி நிறுவனம் தொடர்பான தகவலை நியூசிலாந்துக்கு அனுப்பி உள்ளது. அதை தொடர்ந்து நியூசிலாந்து மேற்கொண்ட விசாரணைகள் இலங்கையில் இயங்கும் பொய்யான நிதி நிறுவனம் தொடர்பான உண்மையை நிரூபித்து உள்ளன.
.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேளையில் மொத்தம் 88 இலங்கை மாணவ விசா விண்ணப்பங்கள் நியூசிலாந்து அதிகாரிகளின் கைவசம் இருந்துள்ளன. அந்த 88 போரையும் தமது நிதிநிலையை மீண்டும் உறுதிப்படுத்தும்படி கேட்டபோது, 83 பேர் பதிலளிக்கவில்லை. அதனால் அவர்கள் அனைவரது விண்ணப்பங்களும் மறுக்கப்பட்டுள்ளன.
.

அதனை தொடர்ந்தே முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே விசா பெற்றுகொண்டோரின் விண்ணப்பங்களும் மீள் விசாரணைக்கு உட்பட்டுள்ளன.
.