ரஷ்யா-லிதுவேனியா மோதலை தவிர்த்தது NATO

ரஷ்யா-லிதுவேனியா மோதலை தவிர்த்தது NATO

ரஷ்யாவுக்கும், NATO நாடான லிதுவேனியாவுக்கும் (Lithuania) இடையில் மோதல் ஒன்று நிகழ இருந்தவேளை ஐரோப்பிய ஒன்றியமும், NATO அணியும் அதை தவிர்த்து உள்ளன.

ரஷ்யாவுக்கு சொந்தமான கலின்ங்கிராட் (Kaliningrad) என்ற Baltic கடலோர பகுதி ரஷ்யாவுடன் நில தொடர்பை கொண்டிருக்கவில்லை. அதனால் ரஷ்யாவில் இருந்து பொருட்கள் லிதுவேனியா மூலம் கலின்கிராட் செல்ல இரண்டு நாடுகளிடையே இணக்கம் இருந்துள்ளது.

ஆனால் ரஷ்யா யூகிரேனை தாக்க ஆரம்பித்த பின் ஐரோப்பிய நாடுகளும், NATO அணியும் ரஷ்யா மீது பெரும் பொருளாதார தடைகளை விதித்தது. அதனால் NATO நாடான லிதுவேனியா ரஷ்ய பொருட்கள் தனது நாட்டின் மூலம் கலின்ங்கிராட் செல்வதை NATO விதிக்கு அமைய தடுக்க ஆரம்பித்து.

சுமார் ஒரு லட்சம் ரஷ்ய மக்களுக்கான பொருட்கள் செல்வதை லிதுவேனியா தடுப்பது குற்றம் என்றும் தாம் பதில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரஷ்யா கூறியது. ஆயுதங்கள் மட்டுமன்றி கட்டிட பொருட்கள், இரும்புகள் போன்ற பொருட்களும் NATO அணியால் தடை செய்யப்பட்டு இருந்தன.

இன்னோர் போரை தவிர்க்கும் நோக்கில் தடை செய்யப்பட்ட பொருட்கள் லிதுவேனியா மூலம் கலின்ங்கிராட் செல்ல NATO இன்று புதன் உரிமை வழங்கி உள்ளது.

கலின்ங்கிராட் இரண்டாம் உலக யுத்த இறுதியில் ரஷ்யா ஜேர்மனியிடம் இருந்து கைப்பற்றிய பகுதி.